மேலும் செய்திகள்
வணிகர் சங்க கிளை துவக்க விழா
05-Mar-2025
திருப்பூர் இமாலயா - பூமலுார் பள்ளி அபாரம்
21-Feb-2025
பல்லடம்; திருப்பூர் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து 'லீக்' போட்டிகள், திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மற்றும் பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் துவங்கின. திருப்பூர், உடுமலை, சேவூர், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மொத்தம், 22 அணிகள் பங்கேற்கின்றன.பல்லடத்தில் துவங்கிய 'லீக்' போட்டிகளை, கால்பந்து கழகத் தலைவர் ரத்தினசாமி துவக்கி வைத்தார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் திருமூர்த்தி, தமிழ்ச்சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்ச் 2ல் துவங்கி 19ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த போட்டிகள் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
05-Mar-2025
21-Feb-2025