மேலும் செய்திகள்
'ஜிவி' பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாம்பியன்
01-Sep-2024
திருப்பூர்: டீ பப்ளிக் பள்ளியில் நடந்த திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி களில், தி பிரன்ட்லைன் அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவர் பிரிவு தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். மாணவர் ஹரிகிருஷ்ணன், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதலில் முதல் பரிசு வென்று ஒட்டுமொத்த தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்.17 வயது பிரிவில் மாணவர் முகமது சல்மான் 100 மீ,200மீ ஓட்டப் போட்டியில் முதலிடமும், குண்டு எறிதலில் மூன்றாமிடமும் வென்று ஒட்டுமொத்த தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். பல்வேறு போட்டிகளிலும் மாணவர்கள் வென்றனர். மாணவியர் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்த சாதனையை படைத்து வருகின்றனர். மாணவர் குழு விளையாட்டுப் போட்டிகளிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வசமானது. இறகுப்பந்து போட்டியில் 12 பிரிவுகளிலும் முதல் பரிசு வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைபள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.
01-Sep-2024