உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கட்டுக்குள் வந்தது குப்பைக்கிடங்கு தீ 

கட்டுக்குள் வந்தது குப்பைக்கிடங்கு தீ 

முதலிபாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதலிபாளையம் நல்லுார் பாறைக்குழி பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலை போல் குவிந்து கிடக்கும் பழைய குப்பைக் கிடங்கில் கடந்த இரு நாட்கள் முன்பு நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு ஏக்கர் பரப்பளவில் இந்தத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விடிய விடியப் போராடி, நேற்று காலை தீயின் வீரியத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் உத்தரவின் பேரில் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் இந்தத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். மக்கள் நலன் கருதி துரிதமாகச் செயல்பட்ட அனைத்துத் துறையினருக்கும் முதலிபாளையம் – நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை