உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குண்டம் திருவிழா கலை நிகழ்ச்சி; போலீஸ் திடீர் அனுமதி மறுப்பு

குண்டம் திருவிழா கலை நிகழ்ச்சி; போலீஸ் திடீர் அனுமதி மறுப்பு

பல்லடம்; பல்லடத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் உள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. ஆண்டுதோறும் கலை நிகழ்ச்சிகள், ஆர்க்கெஸ்ட்ரா உள்ளிட்டவை, பல்லடம் முப்பெரும் நற்பணி மன்ற பேரவை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்கெஸ்ட்ரா நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அதிருப்தி அடைந்த பேரவையினர், ''நீங்கள் அனுமதி மறுக்க வேண்டாம்; நாங்களே ரத்து செய்து கொள்கிறோம்'' என்று கூறி, அதற்கான கடிதத்தை போலீசாரிடம் வழங்கி சென்றனர்.பல்லடம் முப்பெரும் நற்பணி மன்ற பேரவையினர் கூறியதாவது:குண்டம் திருவிழாவையொட்டி கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக கலை நிகழ்ச்சிகள், ஆர்கெஸ்ட்ரா உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறோம். யாருக்கும் இடையூறு இல்லாமல், இரவு முழுவதும் விமரிசையாக நடைபெறும். எந்த அசம்பாவிதங்களும் நடந்ததில்லை. ஆனால், இம்முறை போலீசார் அனுமதி மறுக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக, அனுமதி பெற வேண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்தும், நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலில், அனுமதி இல்லை என்கின்றனர். எனவே, 'நீங்கள் அனுமதி மறுக்க வேண்டாம்; நாங்களே நிகழ்ச்சிகளை ரத்து செய்து கொள்கிறோம்' என்று கூறி, ரத்து செய்ததற்கான கடிதத்தையும் போலீசாரிடம் வழங்கியுள்ளோம். போலீசார் கெடுபிடி காட்டுவது அதிருப்தியை அளிக்கிறது. பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

குறுகிய நேரத்தில் முடிக்க அறிவுறுத்தல்: போலீஸ்

போலீசாரிடம் கேட்டதற்கு, 'இரவு, 2:00 மணி வரை கலை நிகழ்ச்சிகள், ஆர்கெஸ்ட்ரா நடத்த அனுமதி கேட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, நிகழ்ச்சிகளை குறுகிய நேரத்தில் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை