உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து முன்னணியினர் காப்பு அணிந்து விரதம்

ஹிந்து முன்னணியினர் காப்பு அணிந்து விரதம்

திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், மாநகரில், 1,001 சிலைகள் என மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.அவ்வகையில், திருப்பூர் மாநகர் மாவட்டம் ஹிந்து முன்னணி சார்பில், தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை காப்பு அணிந்து, விரதம் துவங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் சண்முகம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட பொதுசெயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். * திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வடக்கு பகுதி ஹிந்து முன்னணி சார்பில், மாலை அணிவித்து, காப்பு அணிந்து விரதம் துவங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில செயலாளர் சேவுகன், மாவட்ட செயலாளர் சிவா, முருகேசன், துணை தலைவர் சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இவ்வாறு, ஒவ்வொரு பகுதியிலும், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.---விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர் - கோட்டை மாரியம்மன் கோவிலில், ஹிந்து முன்னணியினர் காப்பு கட்டிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !