உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு

திண்ணைப் பிரசாரம் ஜெயராமன் அழைப்பு

திருப்பூர்;திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தெற்கு தொகுதிக்கான செயல் வீரர்கள் கூட்டம், 'சேம்பர் ஆப் காமர்ஸ்' அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுந்தராம்பாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,''கட்சியில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களை, வீடு தேடிச்சென்று சந்திக்க வேண்டும். வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிருந்தே நாம் தயாராக வேண்டும். தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு குறித்து மக்களிடையே திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். ஓட்டு வங்கியை வலுவாக்கி, இயக்கத்தை இரும்பு கோட்டையாக மாற்ற, இளைஞர்களை கட்சிக்கு அழைத்துவர வேண்டும்; நிர்வாகிகளாக நியமிக்கப்பட வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, வாலிபாளையம் பகுதிக்கு உட்பட்ட ஐந்து வார்டுகளில், புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !