மேலும் செய்திகள்
கோகோ: அரசுப்பள்ளிகள் அசத்தல்
24-Aug-2024
திருப்பூர், தெற்கு குறுமைய மாணவர் கபடி போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லுாரியில் நேற்று நடந்தது.போட்டியை கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். 19 வயது பிரிவு இறுதி போட்டியில், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 2வது இடம் பெற்றது. 17 வயது பிரிவு இறுதி போட்டிக்கு, முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி அணி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி தேர்வானது.பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டிக்கு, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி தகுதி பெற்றது. கபடி போட்டிக்கான அணிகள் அதிகம் என்பதாலும், போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், 17 மற்றும், 14 வயது இறுதி போட்டி வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.கால்பந்து போட்டிவடக்கு குறுமைய கால்பந்து போட்டி, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் பள்ளியில் நேற்று நடந்தது. 14 மற்றும், 19 வயது பிரிவு இரண்டிலும், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி, 2வது இடம். 17வயது பிரிவில், மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணி முதலிடம், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி, 2வது இடம் பெற்றது.
24-Aug-2024