உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 40 நாளில் கற்ற கும்மியாட்டம் கோவிலில் அரங்கேற்றம்

40 நாளில் கற்ற கும்மியாட்டம் கோவிலில் அரங்கேற்றம்

பல்லடம்;பல்லடம் அருகே, 40 நாட்களில் கும்மியாட்ட கலையை கற்றுக் கொண்ட கலைஞர்கள், மலையம்பாளையம் கால பைரவர் கோவில் வளாகத்தில் அரங்கேற்றம் நடத்தினர்.பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் கிராமத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோவிலில், பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின், 125வது அரங்கேற்ற விழா நிகழ்ச்சி நடந்தது. மூத்த ஆசிரியர் அருணாச்சலம் தலைமை வகித்தார். துணை ஆசிரியர்கள் மணி, பரமசிவம், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, கோடை விடுமுறையை முன்னிட்டு, 40 நாட்கள் கும்மியாட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், ஏராளமான மாணவ மாணவியர், இளம் பெண்கள் தாய்மார்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இதன் அரங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சை நிற சீருடையில் காலில் சலங்கைகள் கட்டியபடி பங்கேற்ற கலைக்குழுவினர், பஞ்ச பாண்டவர்களில் ஒருவன் அர்ஜுனனின் வாழ்க்கை முறை, அரசாட்சி மற்றும் குடும்ப வாழ்வியல் முறையை பாடலாக பாடிய படி கும்மியாட்டம் ஆடினர். பயிற்சி ஆசிரியர்கள் பொன்னம்மாள், பிரியா, சுதா, பவனிகா, பூங்கொடி, சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், கலைக்குழுவினர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ