உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சமுதாயத்தில் மரியாதையுடன் வாழலாம்!

சமுதாயத்தில் மரியாதையுடன் வாழலாம்!

திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி; பனியன் தொழிலாளி. சர்வதேச மகளிர் தினம் குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை...படித்துக்கொண்டிருக்கும் போதே, விடுமுறை நாட்களில் பனியன் நிறுவனங்களுக்கு சென்று, வேலை செய்து பழகினோம். விடுமுறையில் சம்பாதித்து, கல்விக்கு தேவையான நோட்டு, புத்தகம், பை, காலணி போன்ற பொருட்களை வாங்குவோம்.பெண்கள், தன்னாலும் திறமையாக வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக டெய்லரிங் தொழிலை பழகினோம்.இன்று, பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறேன். கை நிறைய சம்பளம் கிடைக்கிறது... அதைக்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்து வருகிறோம்.இன்றைய உலகில், அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள், கல்வியில் சிறந்து விளங்கினால், கலெக்டர் போன்ற உயர்பதவிகளை அடையலாம்.எந்த வேலையாக இருந்தாலும், தன்னம்பிக்கையுடன், நேர்மையாக பணியாற்றினால், யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. சமுதாயத்தில் மரியாதையுடன் வாழலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை