மாதேஸ்வரன் கோவில் விழா
பல்லடம்; பல்லடம் அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சி, வேலப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவில் முதலாம் ஆண்டு நிறைவு விழா வழிபாடுகள் நேற்று நடந்தன. நேற்று காலை தீர்த்தக் குடங்கள் எடுத்துவரப்பட்டன. காலை, 11.30க்கு மகா அபிஷேகம், கலச நீராட்டு ஆகியவற்றைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்தார். பேரூர், பச்சாபாளையம் சாந்தலிங்க அருட்பணி மன்றத்தை சேர்ந்த பூபதி மற்றும் குழுவினர் வேள்வி வழிபாட்டை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.