உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முத்தான முப்பெரும் கண்காட்சி l ஒரே கூரையின் கீழ் சங்கமிக்கும் நிறுவனங்கள் l ஐ.கே.எப்.,-ல் இன்று துவங்கி, 3 நாள் நடக்கிறது ஐ.கே.எப்.,-ல் இன்று துவங்கி, 3 நாள் நடக்கிறது

முத்தான முப்பெரும் கண்காட்சி l ஒரே கூரையின் கீழ் சங்கமிக்கும் நிறுவனங்கள் l ஐ.கே.எப்.,-ல் இன்று துவங்கி, 3 நாள் நடக்கிறது ஐ.கே.எப்.,-ல் இன்று துவங்கி, 3 நாள் நடக்கிறது

திருப்பூர்:திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா மற்றும் டைகெம் பிராசஸ் ஆகிய மூன்று கண்காட்சிகள், இன்று துவங்குகின்றன.நாடு முழுவதும், 193 முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், புதுமையான நுால் மற்றும் துணி ரகங்களை காட்சிப்படுத்துகின்றனர்.நுால், இழைகள், துணி ரகங்கள், துணை பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் அரங்கம் அமைக்கின்றன.இன்று காலை, 11:00 மணிக்கு நடைபெறும் துவக்க விழாவில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பை எளிதாக்கும் அனைத்து வகையான துணி ரகங்கள், நுாலிழை, ஆடை அலங்கார பொருட்கள், டைஸ்கள், ரசாயனங்கள் உள்பட உப பொருட்கள் இடம்பெறுகின்றன.பருத்தி, பட்டு, பிளாக்ஸ், ராமி போன்ற இயற்கை இழைகள், ரீஜெனரேட்டட், சிந்தடிக் ரக செயற்கை இழைகள். பருத்தி, பட்டு, கம்பளி, லினென் உள்ளிட்ட இயற்கை நுால், எலாஸ்டிக், பேன்ஸி நுால்.

வெளிநாட்டுநிறுவனங்கள்

சில்க், பாட்டம் வெயிட், வெல்வெட், டெனிம், பிரின்டட் துணி ரகங்கள்; விசைத்தறிகளில் தயாரிக்கப்பட்ட சர்ட்டிங், டிரிம்ஸ். பட்டன், ஹேங்கர், ஜிப், இன்டர் லைனிங், லேபிள், லேஸ், மோட்டிவ்ஸ், ஸ்டோன், ஸ்டட்ஸ், டேப்ஸ் உள்பட அனைத்து வகையான ஆடை தயாரிப்பு உதிரி பொருட்கள் பிரத்யேக அரங்குகளில் இடம் பெறுகின்றன.டைகெம் கண்காட்சியில், டைஸ், பிக்மென்ட்கள், ரியாக்டிவ், சல்பர், ஆசிட், ஆல்கலைன்கள்; பிரின்டிங் பேஸ்ட், இங்க், ப்ரீ டிரீட்மென்ட் அண்டு பினிஷிங் ஏஜென்டுகள், டையிங், பிரின்டிங், பிசாரசிங்கிற்கு தேவையான மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன.திருப்பூர், ஈரோடு, அகமதாபாத், பெங்களூரு, பெல்லாரி, திண்டுக்கல், பரிதாபாத், குர்கோவன், ஐதராபாத், இந்துார், கொல்கத்தா, லுாதியானா, பானிபட், சூரத் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பெல்ஜியம், கனடா, சீனா, எகிப்து, ஹாங்காங், நெதர்லாந்து அமெரிக்கா போன்ற வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.இன்று துவங்கும் கண்காட்சி வரும், 14ம் தேதி வரை தொடர்ந்துமூன்று நாட்கள் நடைபெறுகிறது.கண்காட்சியில் வர்த்தகர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு,www.textilefairsindia.comஎன்கிற இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை