பியர்சன் விருது பெற்றகிட்ஸ் கிளப் மாணவர்கள்
திருப்பூர்; சர்வதேச நிறுவனமான 'பியர்சன்' நிறுவனத்தின், 'எட் எக் செல்' விருதினை திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.சர்வதேச அளவிலான கற்றல் நிறுவனமான 'பியர்சன்' நிறுவனம் ஆண்டுதோறும், சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, 'எட் எக் செல்' என்ற சிறப்பு விருதினை வழங்கி வருகிறது.அவ்வகையில் நடப்பாண்டுக்கான சிறந்த கற்றவர்கள் விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் தன்விகா மற்றும் ரெஸ்வின் ஆகியோர் விருதினைப் பெற்றனர்.இவர்கள் இருவரும், கணித பாடத்தில், கல்விச் செயல் திறனுக்காக, உலகின் முதல் தர வரிசையில் இடம் பெற்று, 'பியர்சன் எக்செலன்ஸ்' விருது மற்றும் அந்நிறுவனத்தின் மூத்த தலைவர் வழங்கிய சிறப்பு சான்றிதழ்களையும் பெற்றனர்.