உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் உடைப்பு குடிநீர் விரயம்

குழாய் உடைப்பு குடிநீர் விரயம்

திருப்பூர்: திருப்பூர் 44வது வார்டுக்குட்பட்ட காங்கயம் கிராஸ் ரோட்டில் ஒரு பகுதியில், பிரதான குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இதில் அருகேயுள்ள செல்லப்ப புரம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் அமைந்துள்ளது. பிரதான குழாய் சிமென்ட் குழாயாகவும், வார்டு பகுதிக்கு வினியோகம் செய்ய இரும்பு குழாயும் பொருத்தப்பட்டுள்ளது.இந்த இணைப்பு உள்ள பகுதி பிரதான ரோட்டில் அமைந்துள்ளது. அதிகளவிலான வாகனங்கள் செல்லும் ரோடாக உள்ளது. இதனால், இந்த இணைப்பு குழாய் உள்ள பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும், இந்த இடத்தில் ரோட்டை குழி தோண்டி உடைப்பு சரி செய்யும் பணி நடப்பதும், மீண்டும் சிறிது நாளுக்குப் பின் உடைப்பு ஏற்படுவ தும் சகஜமாக உள்ளது.கடந்த இரு நாட்களுக்கு முன் உடைப்பை சரி செய்யும் பணிக்கு அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனப் போக்குவரத்து உள்ளதால், அந்த இடத்தில் 'பேரிகார்டு' வைத்து பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து இந்த பிரச்னை உள்ளதால், மாற்று வழியில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ