உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

உடுமலை;உடுமலையில் முக்கிய ரோடுகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகரில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, திருப்பூர் ரோடு போன்றவை உள்ளன.இந்த ரோடுகளில், எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் காணப்படுகிறது. மேலும் பைபாஸ் ரோட்டில் கனரக வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, முக்கிய ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ