உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாராந்திர சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

வாராந்திர சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

திருப்பூர்; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து வாராந்திர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிப்., துவக்கம் முதல் வாராந்திர சிறப்பு பஸ்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால், நடப்பு வாரம் பஸ்களின் எண்ணிக்கை, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.நாளை மாசி மாத முகூர்த்த நாள் என்பதால், ஓரளவு பஸ்களில் கூட்டம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றும், நாளையும் கோவில்வழி, புதிய பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ