உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரி உயர்ந்ததால் வாடகையும் உயர்ந்தது; பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

வரி உயர்ந்ததால் வாடகையும் உயர்ந்தது; பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

அனுப்பர்பாளையம்; திருப்பூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணைப்பிரசாரம் கொங்கு மெயின் ரோட்டில் நேற்று நடந்தது.இதில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:கடந்த நான்கு ஆண்டு காலம் தமிழகம் சீரழிவு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில், தினந்தோறும் பாலியல் சம்பவம் நடைபெறாத நாளே இல்லை. ஒரு அமைதியான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு நல்லாட்சி தமிழகத்தில் உருவாக்குவதற்காக அனைவரும் பொறுப்புணர்வோடு கடமை உணர்வோடும் பாடுபட வேண்டும்.இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிற ஸ்டாலின் குடும்ப ஆட்சி எவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு போகிறதோ அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களுக்கு நிம்மதி ஏற்படும். இன்று ஒரு கிலோ அரிசி, 25 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பல மடங்கு விலை உயர்ந்திருக்கிறது.காய்கறி விலை அதிகரித்துள்ளது. சொத்து வரி உயர்வால், வீட்டு வாடகை உயர்ந்து ஏழைகள் நகர்ப்புறங்களை விட்டு மீண்டும் அவருடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.மின் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் வீட்டு வரி உயர்வு ஏற்படுகிறது. எனவே, இதைப் போக்கும் வகையில், அனைவரும் தீவிரமாக பணியாற்றி இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர் முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி