உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாரண பயிற்சி நிறைவு விழா

சாரண பயிற்சி நிறைவு விழா

திருப்பூர்: மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி முகாம், 3ம் தேதி, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் துவங்கியது. நிறைவு விழா நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் தலைமை வகித்தார். பயிற்சியில் பங்கேற்றவர் 'படைகளை நடத்தும் முறை' குறித்து, மாநில பயிற்சி ஆணையர் நாகராஜன் பேசினார். சுதாலட்சுமி, அமானுல்லா, லட்சுமணன், புனிதா ஆகியோர் பயிற்சியளித்தனர். மாவட்ட உதவி ஆணையர் ராஜாராம், உதவி செயலர் தனசிங் ஒருங்கிணைத்தனர். மாவட்ட அமைப்பு ஆணையர் சண்முகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை