உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம் 

இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ் இயக்கம் 

திருப்பூர்;'தொடர் விடு முறையை முன்னிட்டு, இன்றிரவு முதல் மூன்று நாட்களுக்கு, வெளியூர் செல்ல சிறப்பு பஸ் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டல அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இன்று புனித வெள்ளி விடுமுறை, நாளை, சனிக்கிழமை, வரும், 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள் மூன்று நாள் விடுமுறை என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு, 25 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து சேலம், திருவண்ணாமலை, அரூர் மற்றும் சென்னைக்கு, 15 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப இவ்வழித்தடத்தில், 25 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.'இன்று இரவு, நாளை இரவும் திருப்பூரில் இருந்து புறப்படும் பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். வரும், 31ம் தேதி இரவு, திருப்பூருக்கு வந்து சேரும் பயணிகள் கூட்டம் நிறையும். அதற்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கம் இருக்கும். சென்னையில் இருந்து திருப்பூர் வருவோருக்காக நாளை (இன்று) காலை இரண்டு பஸ்கள் அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி