உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனைவி நல வேட்பு தம்பதியர் பங்கேற்பு

மனைவி நல வேட்பு தம்பதியர் பங்கேற்பு

அவிநாசி : அவிநாசி மனவளக்கலை மன்றம் சார்பில், அவிநாசியிலுள்ள பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி திறந்தவெளி அரங்கில், அன்னை லோகாம்பாள், 110வது பிறந்த நாள் விழா, மனைவி நல வேட்பு விழா ஆகியன நடைபெற்றது.இதில், 150க்கு மேற்பட்ட தம்பதியர், மனவளக்கலை அன்பர்கள் பங்கேற்றனர். ஆழியார், அறிவுத்திருக்கோவில், விஷன் கல்வி, இயக்குனர், அருள்செல்வி மனைவி நல வேட்பு விழாவை நடத்தி வைத்தார். தம்பதியர் மத்தியில் மலர், கனி பரிமாற்றம் நடத்தப்பட்டது.'வேரென நீ இருந்தால்' எனும் தலைப்பில், கவிஞர் கவிதாசன் இல்லற வாழ்வின் சிறப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை