உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழ் கையெழுத்து போட்டி: 200 மாணவியர் பங்கேற்பு

தமிழ் கையெழுத்து போட்டி: 200 மாணவியர் பங்கேற்பு

உடுமலை, ; உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கையெழுத்து போட்டி நடந்தது.அரசு பள்ளி மாணவர்களின், பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், போட்டிகளை அரசு அவ்வப்போது நடத்தி வருகிறது.இந்நிலையில், மாநில தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், பள்ளிகளில் மாணவர்களிடம் தமிழ் மொழி குறித்த ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், தமிழில் அழகாக எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ் கையெழுத்து போட்டி நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில், இப்போட்டியில் வெற்றி பெறும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, முதல் பரிசாக, மூவாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, இரண்டாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.தொடர்ந்து பத்து முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, முதல் பரிசாக, நான்காயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, மூவாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்கொணரலாம்.இதன் அடிப்படையில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு பிரிவாகவும் போட்டி நடந்தது. போட்டியில் 200க்கும் அதிகமான மாணவியர் பங்கேற்றனர்.இதில், மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளை பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் துவக்கி வைத்தார். பள்ளி இலக்கிய மன்ற செயலாளர் சின்னராசு, தமிழாசிரியர்கள் ராஜேந்திரன், சிவசுந்தரி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை