திருப்பூர்;' ஜூன், 24ம் தேதி துவங்க உள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தவறுபவர்கள் ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்தி, தட்கலில் விண்ணப்பிக்க வேண்டும்,' என, தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 6ம் தேதி வெளியானது. மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 849 பேர் தேர்வெழுதியதில்,23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில், 370 பேரும், மாணவியரில், 237 பேர் என மொத்தம், 607 பேர் தேர்ச்சி பெறவில்லை.தேர்ச்சி பெறாதவர் மட்டும் தேர்வுக்கு வராதவர்களுக்கு ஜூன், 24 முதல், ஜூலை, 1 ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வெழுத விரும்புவோர் மே, 16 முதல் தங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள, அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தட்கல் முறையில் கூடுதலாக ஆயிரம் ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி, ஜூன், 3, 4ம் தேதி விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.