உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிப்பிட வசதி கட்டாயத்தேவை: ரேஷன் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

கழிப்பிட வசதி கட்டாயத்தேவை: ரேஷன் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க மாவட்ட மாநாடு, சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது.தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். துணை தலைவர் கருப்பசாமி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். துணை செயலாளர் சரவணமூர்த்தி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாநாட்டை துவக்கி வைத்தார்.செயலாளர் மகேந்திரன், சங்கத்தின் செயல் அறிக்கையையும், பொருளாளர் சுரேஷ், வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைவராக கவுதமன், செயலாளராக மகேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.பொது வினியோக திட்டத்துக்கு தனி அரசுத்துறை ஏற்படுத்த வேண்டும்; ரேஷன் கடைகளில் கழிப்பிட வசதியை செய்து கொடுக்க வேண்டும்.கடைகளுக்கு முழு ஒதுக்கீடு செய்து, எடை குறைவில்லாமல் பணியாளர் முன்னிலையில் எடை சரிபார்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி