உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுத்தமாக இல்லாத சுகாதாரம்

சுத்தமாக இல்லாத சுகாதாரம்

திருப்பூர், காங்கயம் ரோடு, வி.ஜி.வி., கார்டன் உள்ளிட்ட 46வது வார்டு பகுதிகளில், குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. பெரும்பாலான கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் கழிவு நீர் செல்வது தடைபட்டுள்ளது. கொசு உற்பத்தியும், துர்நாற்றமும் நிலவுகிறது. காலி நிலத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இது காற்றில் பரவி ரோட்டிலும், அருகேயுள்ள வீடுகளின் முன்புறம் சென்று விழுகிறது. மின் கம்பங்கள், மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை மின்வாரியத்தினர் வெட்டி வீசியுள்ளனர். இது போல் வெட்டி வீசப்பட்ட மரக்கிளைகளும் ஆங்காங்கே தெருவோரம் கிடக்கிறது. இவை அகற்றப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ