வேகத்தடையின் இருபுறமும் பள்ளம் நிலைதடுமாறும் வாகனங்கள்
உடுமலை;வாகனங்களை பதம் பார்க்கும் வேகத்தடையை, நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என எரிசனம்பட்டி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகே முக்கோணத்தில், தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து எரிசனம்பட்டி வழியாக ஆனைமலை செல்லும் ரோட்டில், சுற்றுலா வாகனங்கள் அதிகளவு செல்கின்றன.இதில், எரிசனம்பட்டி சந்திப்பு பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வேகத்தடையின் இருபுறங்களிலும், ரோடு அரிக்கப்பட்டு, குழியாக மாறி விட்டது.ஆனால், வேகத்தடை அதே உயரத்தில் உள்ளது. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வேகத்தடையை கடக்கும் போது, தடுமாறுகின்றன.இரவு நேரங்களில், நிலைதடுமாறி இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். பெரும்பாலான வாகனங்களின் அடிப்பகுதி, வேகத்தடையில் மோதுகின்றன.வாகனங்களை பதம் பார்க்கும் இந்த கட்டமைப்பு குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என, எரிசனம்பட்டி பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.