உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாலிபால்: வித்ய விகாசினி பள்ளி வாவ்

வாலிபால்: வித்ய விகாசினி பள்ளி வாவ்

திருப்பூர்:திருப்பூர் தெற்கு குறுமைய மாணவியர் வாலிபால் போட்டி, ஸ்ரீ அலகுமலை வித்யாலயாவில் நேற்று நடந்தது. பள்ளி செயலாளர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவில் தலா, ஆறு அணி வீதம், மொத்தம், 18 அணிகள் பங்கேற்று விளையாடின.பதினான்கு வயது பிரிவு இறுதி போட்டியில், வித்ய விகாசினி பள்ளி அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்றது. 17 மற்றும், 19 வயது பிரிவில் வித்யவிகாசினி பள்ளி அணி, விவேகானந்தா மற்றும் வேலவன் மெட்ரிக் பள்ளி அணியை, 2 - 0 என்ற செட் கணக்கில் வென்றது. கண்காணிப்பு குழு உறுப்பினர் மகேந்திரன், நடுவர்குழு தலைவர் முருகன் ஒருங்கிணைத்தனர்.

எறிபந்து போட்டி

திருப்பூர், ெஷரீப் காலனி, கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் தெற்கு குறுமைய மாணவியர் எறிபந்து போட்டி நேற்று நடந்தது. 14 வயது பிரிவில், 14, 17 வயது பிரிவில், 12, 19 வயது பிரிவில், பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. 19, 14 வயது பிரிவில் முறையே, கிட்ஸ் கிளப் பள்ளி அணி, 2 - 0, 2 - 1 என்ற செட் கணக்கில், செயின்ட் ஜோசப் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவு இறுதி போட்டிக்கு செயின்ட் ஜோசப் பள்ளி அணி, கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளி அணி முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை