உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்கள் சுய மரியாதையை விட்டுத் தரக்கூடாது

பெண்கள் சுய மரியாதையை விட்டுத் தரக்கூடாது

திருப்பூர்; திருப்பூரில் மகளிர் தினத்தையொட்டி, மாவட்ட கோர்ட் வளாகத்தில் பெண் நீதிபதிகள் தின விழா கொண்டாடப்பட்டது.மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவின் உத்தரவின் பேரில், மகளிர் தினத்தை முன்னிட்டு உலக பெண் நீதிபதிகள் தின விழா திருப்பூர் மாவட்ட கோர்ட்ட வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தின் மாவட்ட நீதிபதி பாலு வழங்கினார். மூன்று வக்கீல் சங்கங்களின் தலைவர் சுப்ரமணியம், பூபேஷ், சுப்புராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி தாரணி பேசியதாவது:அனைத்து துறையிலும் இரு பாலின சம உரிமை என்பது இன்று வரை நாம் போராடி பெற வேண்டிய சூழல் உள்ளது. பெண்கள் எவ்விடத்திலும் தங்களின் சுய மரியாதையை விட்டு கொடுத்தல் கூடாது. பெண்கள் தங்கள் உடல், மன நலனிலும் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஷபீனா நன்றி கூறினார். முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பெண் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் கோர்ட் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா நிறைவாக வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி