உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளருக்கு சம்பள நிலுவை வரும் 21ல் முற்றுகை போராட்டம்

தொழிலாளருக்கு சம்பள நிலுவை வரும் 21ல் முற்றுகை போராட்டம்

திருப்பூர்: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசித்தனர்.தேசிய வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு, நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலை அட்டை பெற்று, வேலைக்கு தயாராக உள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் மறுக்கின்றன. நான்கு மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 21ம் தேதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !