உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 16 கிலோகுட்கா பறிமுதல்

16 கிலோகுட்கா பறிமுதல்

அவிநாசி: அவிநாசி அருகே வீட்டில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 16 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், வட மாநில தொழிலாளியை கைது செய்தார்.அவிநாசி அருகே தெக்கலுாரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சங்கர்ராய் மகன் சந்தோஷ் ராய் 31.இவர் தங்கி இருந்த வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று வீட்டில் சோதனை செய்ததில் 16 கிலோ குட்கா விற்பனைக்காக இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, சந்தோஷ் ராயை அவிநாசி போலீசார் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ