மேலும் செய்திகள்
அவிநாசி தேர்த்திருவிழா.
07-May-2025
அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தேவராயம்பாளையம் ஜே.ஜே., நகர் பகுதியில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியுள்ளதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அதில், உகாண்டா நாட்டின், கம்பாலா பகுதியைச் சேர்ந்த நாகன்வகி ஆயிஷா, 31, எவ்லின் டினா, 34, ஆகிய இரு பெண்கள் விசா காலம் முடிந்தும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அவிநாசி போலீசார் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
07-May-2025