உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு

மானியத்துடன் தொழில் கடன் 23 பயனாளிகள் தேர்வு

திருப்பூர்,; திருப்பூர் மாவட்ட தொழில்மையம் சார்பில், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு நேர்காணல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கார்த்திகை வாசன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்கபிரசாத், உதவி மேலாளர் சுரேஷ்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.நீட்ஸ் மற்றும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களில் அரசு மானியத்துடன் தொழில் கடன் பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். துவங்க உள்ள தொழில் தொடர்பான திட்ட அறிக்கை, தேவைப்படும் கடன் தொகை, ஆவணங்களை, அதிகாரிகள் குழு பரிசீலனை செய்தனர். அம்பேத்கர் தொழில்முன்னோடிகள் திட்டத்தில் கடன் கேட்டு 51 பேர் விண்ணப்பித்த நிலையில், நேர்காணலில் 16 பேர் பங்கேற்றனர்; இவர்களில், 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.'நீட்ஸ்' திட்டத்தில், 12 பேர் விண்ணப்பித்த நிலையில், 11 பேர் நேர்காணலில் பங்கேற்றனர்; ஒன்பது பேர் கடன் பெற தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை