உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 8.5 கிலோ கஞ்சா பறிமுதல்

8.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று முன்தினம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல்லடம், ஆறுமுத்தாம்பாளையம் - கரைப்புதுார் ரோடு பண்ணைக்காட்டில் கஞ்சா விற்ற, ஒடிசாவை சேர்ந்த சஞ்சய்குமார் நியால், 28, கைது செய்து, 2 கிலோ கஞ்சா; பல்லடம் உடுமலை ரோடு சேரன் நகரில் சந்திரமணி பெஹெரா, 39 என்பவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா; வெள்ளகோவில் மூலனுார் ரோட்டில் சின்னக்கரை பிரிவு நீலாமணி மத்தான், 46 என்பவரை கைது செய்து, 1.5 கிலோ என, மூன்று இடங்களில் சேர்த்து, 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரும், தங்களது சொந்த ஊருக்கு செல்லும் போது, அங்கிருந்து வருபவர்களிடம் ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !