உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழங்கரை ஊராட்சியில் வளரும் குப்பை மலை

பழங்கரை ஊராட்சியில் வளரும் குப்பை மலை

அவிநாசி : பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம் பாளையம் செல்லும் வழியில் இரு வேறு இடங்களில் குடியிருப்புகளுக்கு அருகில் மக்காத பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் என குவியலாக குவித்து வைத்துள்ளனர்.இரவு நேரங்களில் இந்த குப்பைக் குவியலுக்கு தீ வைத்து விடுவதால் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல், சுவாசக் கோளாறுகள் என நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஊராட்சியில், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமே வேலையில் இருப்பதால் துாய்மை பணிகளை செய்ய துப்புரவு ஊழியர்களை முறையாக அனுப்புவதில்லை எனவும் கூறுகின்றனர். உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி