உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை

பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டம்: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆலோசனை

உடுமலை:உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள, முடிவு செய்யப்பட்டுள்ளது.உடுமலை நகரிலுள்ள ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பது குறித்து, நகராட்சி அலுவலகத்தில் போக்குவரத்து சீராய்வு கமிட்டி கூட்டம் நடந்தது.நகராட்சித்தலைவர் மத்தீன், கமிஷனர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், நகரிலுள்ள பிரதான ரோடுகளான, தாராபுரம் ரோடு, பழநி ரோடு, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, ராஜேந்திரா ரோடு என அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடிவு செய்யப்பட்டது.தற்காலிக கடைகள், நிரந்தர ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வழங்கி, வரும் வாரத்தில், போலீஸ் பாதுகாப்புடன் அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.தாராபுரம் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்தப்படும், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை தாராபுரம் ரோட்டிற்கு மாற்றுவது, ராஜேந்திரா ரோட்டில் வாகன நிறுத்தும் மையங்களை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.கச்சேரி வீதி, கல்பனா ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், சுழற்சி முறையில், ஒரு பகுதியில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் பார்க்கிங் செய்யும் நடைமுறையை அமல்படுத்துவது,பிரதான ரோடுகளிலுள்ள தள்ளுவண்டி கடைகளை முறைப்படுத்தி, போக்குவரத்து பாதிப்பு இல்லாத பகுதிகளில், இடம் ஒதுக்கித்தருவது.ராஜேந்திரா ரோட்டில், பார்க் பள்ளி வரை மையத்தடுப்பு அமைத்தல், பைபாஸ் ரோடு, அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திப்பு பகுதிகளில் நெரிசலை குறைக்க, பார்க்கிங் தடை விதிப்பதோடு, தற்காலிக ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.பைபாஸ் ரோட்டில், ஆம்னி பஸ்களால் மாலை, இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், தற்காலிகமாக, பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதியில், இடம் ஒதுக்கி தருவது என முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்