உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் துறை சார்பில் ஆதார் முகாம் துவங்கியது 

தபால் துறை சார்பில் ஆதார் முகாம் துவங்கியது 

திருப்பூர்; திருப்பூர் குமரன் ரோடு, டவுன்ஹால், லயன்ஸ் கிளப் அரங்கில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.திருப்பூர் தபால் நிலைய தபால் அலுவலர் கார்த்திகேயன், லயன்ஸ் கிளப் செயலாளர் வெள்ளியங்கிரி சிறப்பு முகாமை துவக்கி வைத்தனர். முகவரி, பெயர் மாற்றம், மொபைல் எண் மாற்றம், பிறந்த தேதி மாற்றம் செய்ய, 63 பேரும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புதிய ஆதார் கார்டு எடுக்க, பத்துக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு இருந்தால் போதும். ஆதாரில் கைரேகை, கருவிழி புதுப்பித்தல் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு, 26 பேர் வந்திருந்தனர். காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை நடந்த முகாமில், 135 பேருக்கு ஆதார் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆதார் சிறப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு தபால்துறை அலுவலர்கள் சிறுசேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு கணக்கு, இந்தியன் போஸ்டல் பேமண்ட் பேங்க் அக்கவுண்ட், முதியோர் ஓய்வூதியம், மாணவருக்கான கல்வி உதவித்தொகை குறித்து விளக்கினர்.இன்றும், நாளையும் ஆதார் சிறப்பு முகாம் நடப்பதால், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற தபால் அலுவலர் கார்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ