ஆடி அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம்
திருப்பூர்; ஆடி அமாவாசை தினமான நேற்று, மறைந்த முன்னோர்களுக்கு, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இறந்த முன்னோருக்கு, ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது, முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்கள், தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு, தர்ப்பணம் கொடுத்துவருகின்றனர். ஆடி அமாவாசை நாளான நேற்று, திருப்பூரில், கே.எஸ்.சி., பள்ளி வீதி விநாயகர் கோவில், திருமுருகன்பூண்டி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், மங்கலம் ரோடு சுப்பையா சுவாமி மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பக்தர்கள், தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். பச்சரிசி, காய்கறிகள், எள் மற்றும் தண்ணீர் படைத்து, முன்னோரை வழிபட்டனர். வீடுகளில் தங்கள் முன்னோரின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து, புதிய சேலை மற்றும் வேட்டி ஆகியவை வைத்தும் வழிபட்டனர். உணவு பதார்த்தங்கள், தயிர் சாதத்தில் எள் கலந்தும் காகத்துக்கு வைத்தும் முன்னோர்களை வழிபட்டனர்.