உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குவிந்த மனுக்கள்; தீர்வு கண்டால் சோர்வு வராது

குவிந்த மனுக்கள்; தீர்வு கண்டால் சோர்வு வராது

திருப்பூர்,; பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மொத்தம், 365 மனுக்கள் பெறப்பட்டன.தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி:பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம்பாளையத்தில் இருந்து, பழங்கரை ஊராட்சி பச்சாபாளையத்தை இணைக்கும் மண்ரோடு, 1,600 மீட்டர் உள்ளது. இந்த ரோட்டை தார்ரோடாக தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும். கலெக்டர் உத்தரவிட்ட பிறகும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.திருமூர்த்தி நகர், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பெண்கள்:அரசு வழங்கும் உதவிகள் முழுமையாக எங்களுக்கு கிடைப்பதில்லை. முகாமில் இருந்த பழைய வீடுகளை இடித்து, புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. புதிய வீட்டில், முன்னுரிமை கொடுத்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பல்லடம் கிராம கோவில்பூசாரிகள் நலச்சங்கத்தினர்:பூசாரிகள் நலவாரியத்தில், உறுப்பினராக சேர, ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார், கிராமகோவில் பூசாரிகள் விண்ணப்பித்தால், வருவாய்த்துறை அலுவலர்கள், 1.20 லட்சம் ரூபாய் வருவாய் என்று வருவாய் சான்று வழங்குகின்றனர்; விண்ணப்பம் தள்ளுபடியாகிவிடுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருவாய்ச்சான்று வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.'லா பவுண்டேஷன் இந்தியா' அமைப்பு:பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமம் - ஊஞ்சப்பாளையத்தில், கோழிப்பண்ணை நிறுவனம், நீர்வழிப்பாதையை மறித்து ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளது. வாய்க்காலில் மண் எடுத்து, சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். கட்டட விதிமுறைகளை பின்பற்றாமல், கட்டுமானம் செய்துள்ளனர். கோழிப்பண்ணை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், கடும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டு வருகிறது.பசுமை ஆர்வலர் நாகூர் மீரான் மற்றும் பொதுமக்கள்:வீட்டுமனை பிரித்தவர்கள், ரிசர்வ் சைட் இடங்களை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிலத்தை மீட்குமாறு, கோர்ட் 2023ல் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உள்ளாட்சிகளுக்கு ஒப்படைக்காமல் உள்ள ரிசர்வ் சைட் இடங்களை மீட்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ