மேலும் செய்திகள்
குறைந்த நேர இடைவெளியில் பஸ் இயக்க வலியுறுத்தல்
07-Oct-2024
உடுமலை : விடுமுறை நாட்களில், கோடந்துார் செல்ல உடுமலையில் இருந்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை - மூணாறு ரோட்டில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.உடுமலையில் இருந்து மூணாறுக்கு இயக்கப்படும் பஸ்களில், சின்னாறு செக்போஸ்ட் அருகே இறங்கி இக்கோவிலுக்கு செல்ல வேண்டும்.வனத்துறை வழிகாட்டுதல்படி, வாரத்தின் சில நாட்கள் மட்டும், இக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்நாட்களில், உடுமலையில் இருந்து சின்னாறு செக்போஸ்ட் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.விடுமுறை நாட்களில், கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்ல சுற்றுப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சுற்றுலா பயணியரும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர்.ஆனால், அதற்கேற்ப போதிய சிறப்பு பஸ்கள் இந்த வழித்தடத்தில், இயக்கப்படுவதில்லை. இதனால், நீண்ட நேரம் பஸ்சுக்காக மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வாக, விடுமுறை காலங்களில், கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
07-Oct-2024