அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அவிநாசி: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பயணம் மேற்கொண்டு வருகிறார். அவிநாசியில் செப்டம்பர் 13ம் தேதி பழனி சாமி வருகிறார். இதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர அ.தி.மு.க., சார்பில் அவிநாசியில் நடந்தது. நகர செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்; கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வ ராஜ், பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில் நடந்தது. அவிநாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சேவூரில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி இணைச் செயலாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.