பிஞ்சு விரல்களில் அனா... ஆவன்னா! அரிச்சுவடி துவங்க குட்டீஸூடன் வாங்க l இன்று தினமலர் சார்பில் வித்யாரம்பம்
திருப்பூர் : 'தினமலர்' பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து நடத்தும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, திருப்பூர், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், ஸ்ரீபுரம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் இன்று காலை 7:00 மணிக்குத் துவங்குகிறது.ஆன்மிகச் சான்றோர், கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், உங்கள் குழந்தைகள் கல்வி ஞானத்தைத் துவங்குவதற்கான வாய்ப்பு இதுவாகும்.விஜயதசமியன்று கல்வி, செல்வம், வீரம் போன்ற கலைகளில் காலடி எடுத்து வைப்பதன் வாயிலாக மேற்கொள்ளும் முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம், குழந்தைகள் கல்வி கற்க துவங்குவது, அவர்களின் கல்வி ஞானத்தை அதிகரிக்க செய்யும் என்பதன் அடிப்படையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்தாண்டு, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சி, இன்று, காலை, 7:00 முதல், 10:00 மணி வரை திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம் ஐஸ்வர்யா கார்டனிலுள்ள, ஸ்ரீபுரம், ஜகன்மாதாஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடக்கிறது.சிறப்பு விருந்தினர்களாக, அவிநாசி திருப்புக்கொளியூர் ஆதினம் காமாட்சிதாச சுவாமிகள், ஸ்ரீசக்தி கல்விக்குழும சேர்மன் தங்கவேல், திருப்பூர், கிளாஸிக் போலோ நிர்வாக இயக்குனர் சிவராம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி திருக்கோவில் டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.ஆன்மிகச் சான்றோர், கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், உங்கள் குழந்தைகள் கல்வி ஞானத்தைத் துவங்குவதற்கான வாய்ப்பை தவறவிடாதீர்கள், பெற்றோர்களே!வித்யாரம்பம் நிகழ்ச்சி, இன்று, காலை, 7:00 முதல், 10:00 மணி வரை திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம் ஐஸ்வர்யாகார்டனிலுள்ள, ஸ்ரீபுரம், ஜகன்மாதாஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடக்கிறது.
குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக்
இந்நிகழ்ச்சிக்கு, இரண்டரை வயது முதல், ஆறு வயது குழந்தைகளை பெற்றோர் அழைத்து வரலாம். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு சிலேட், பென்சில், ரப்பர், கிரேயான், ஸ்கூல் பேக் உட்பட கல்வி பொருட்கள் வழங்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் செல்லக் குழந்தைகளை இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, கல்வி பயணத்தை இனிதே துவக்க அன்புடன் அழைக்கிறோம்.---