மேலும் செய்திகள்
சிறப்பு முகாம்
22-Aug-2025
திருப்பூர்; திருப்பூரில் ஆனந்தம் சில்க்ஸ் நாளை கோலாகலமாக திறப்பு விழா காண்கிறது. தமிழகத்தில், ராமநாதபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், ராஜபாளையம், புதுக்கோட்டை மற்றும் கடலுார் ஆகிய நகரங்களில் வெற்றிகரமான ஜவுளி நிறுவனம் நடத்தி வரும் ஆனந்தம் சில்க்ஸ், திருப்பூரிலும் தனது கிளையை அமைத்துள்ளது. திருப்பூர், வாலிபாளையம் மெயின் ரோடு, யுனிவர்சல் தியேட்டர் வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள ஆனந்தம் சில்க்ஸ் திறப்பு விழா, நாளை, காலை, 8:30 மணிக்கு நடக்கிறது. இது குறித்து, ஆனந்தம் சில்க்ஸ் உரிமையாளர்கள் சண்முகநாதன், செல்வகுமார், வடிவேலன், கணேஷ்பாபு ஆகியோர் கூறுகையில், ''திருப்பூரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனத்தை, எங்கள் தாயார் சுந்தர ஆனந்தம் திறந்து வைக்கிறார். நிறுவனத்தில், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், ஆடை ரகங்களும், பெண்களுக்கு பிரத்யேக பட்டு பிரிவு, பேன்ஸி ரக பிரிவும் உள்ளன. ஆண்கள், பெண்களுக்கான பிரத்யேக ரெடிமேட் பிரிவு என கடல் போல ஜவுளி ரகங்கள் உண்டு. திறப்பு விழா சலுகையாக, சில தினங்களுக்கு ஜவுளி வாங்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்,'' என்றனர்.
22-Aug-2025