ஆண்டிப்பண்டாரம் சமூகத்தினர் கலெக்டரிடம் மனு
திருப்பூர்: ஹிந்து ஆண்டிப்பண்டாரம் சமூகத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் ஆண்டிப்பண்டாரம் சமூகத்தை சிலர் கேவலமாக சித்தரித்து வருகின்றனர். பொது அரசியல், டிவி சீரியல், திரைப்பட வசனங்களில், ஆண்டிப்பண்டாரம் சாதியை இழிவுபடுத்தி பேசிவருகின்றனர். இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. திரைப்படங்கள், டிவி சீரியல்களில், ஆண்டிப்பண்டாரம் என்கிற வார்த்தையை பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும். சாதி தொடர்பாக தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.