உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்ராய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

நாட்ராய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாட்ராய சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் அன்னதான திட்டம் செயல்படுத்த, கோவில் நிர்வாகம் சார்பில், அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று முதல் தினமும், 100 பேருக்கு அன்னதான திட்டம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர், பக்தர்களுக்கு உணவு வழங்கி துவக்கி வைத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவில்களில், சிறப்பாக செயல்பட்ட அறங்காவலர்களுக்கு, அமைச்சர் சேகர் பாபு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், நாட்ராயசுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரசேகரன், வெள்ளகோவில் நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ