உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி உற்சாகம்

அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி உற்சாகம்

திருப்பூர்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நேற்று நடந்தது.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டியை, கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும், அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில், சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.சைக்கிள் போட்டி, 13 வயதுக்கு உட்பட்டவர்கள்- 15 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வயதுக்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவுகளாக நடந்தது. ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, வயது சான்று மற்றும் ஆதார் சான்றுகள் சரிபார்க்கப்பட்டது.போட்டி, 13 வயதுக்குட்பட்ட மாணவருக்கு, 15 கி.மீ., துாரமும், மாணவியருக்கு, 10 கி.மீ., துாரமும் நடந்தது. மேலும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோரில், மாணவருக்கு, 20 கி.மீ., - மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம் போட்டி நடந்தது.போட்டிகளில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. நான்கு முதல், 10 இடங்களை பெற்றவர்களுக்கு, தலா, 250 ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை