உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அண்ணமார் கதை நிகழ்ச்சி நிறைவு

அண்ணமார் கதை நிகழ்ச்சி நிறைவு

திருப்பூர்; திருப்பூரில், ஸ்ரீ அண்ணமார் வீர வரலாறு உடுக்கை பாடல்கதை படித்தல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.திருப்பூர் எம்பெருமாள் கலைக்குழு சார்பில், ஸ்ரீ அண்ணமார் வீர வரலாறு உடுக்கை பாடல் கதை படித்தல் நிகழ்ச்சி திருப்பூர் திருநீலகண்டபுரத்தில் தினமும், இரவு நடந்து வந்தது. 48 நாட்களாக தொடர்ச்சியாக நடந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளை முன்னிட்டு கொங்கு பண்பாட்டு மையம் சார்பில், காராளன் கம்பத்தாட்டம் நடந்தது.பொன்னி வளநாடு விழா குழுவினர் பானுமதி, செல்வராஜ், செந்தில்குமார், தனபாக்கியம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ