உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சிவசக்தி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா  கோலாகலம்

 சிவசக்தி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா  கோலாகலம்

திருப்பூர்: திருப்பூர், கணக்கம்பாளையம் சிவசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஸ்ரீ தேவி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் விருது பெற்ற தனபாக்கியம் சுரேஷ்குமார் பங்கேற்று கல்வியின் சிறப்பு குறித்து, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தமிழ், கணினி அறிவியல் பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆசிரியை சவுமியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ