மாணவிக்கு பாராட்டு விழா
உடுமலை; மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான 'வித்யாக்யான்' எனப்படும் திறனறித் தேர்வு நடந்தது. இத்தேர்வில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மூவாயிரம் மாணவர்கள் இத்தேர்வு எழுதினர்.அதில் மாநில அளவில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பாரதிப்ரியாதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தாராபுரம் கல்வி மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு மாணவர்களிலும் ஒருவராக உள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி வரவேற்றார்.தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் அருள்ஜோதி, குடிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் ரோஜாவானரசி, பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியர் குமார் நன்றி தெரிவித்தார்.