உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

உடுமலை; உடுமலை வட்டார அளவில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தன.பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழா போட்டிகள், பள்ளி அளவில் நடத்தப்பட்டு, அடுத்தகட்டமாக வட்டார அளவில் தற்போது நடக்கிறது.இப்போட்டிகள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு, வெவ்வேறு பள்ளிகளில் நடக்கிறது. உடுமலை வட்டார அளவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச்சேர்ந்த, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தன.இசை, வாய்ப்பாட்டு, உள்ளிட்ட போட்டிகள் கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, மணல் சிற்பம், தனிநபர் நடிப்பு, நகைச்சுவை, பலகுரல் பேச்சு, நாடகம் உள்ளிட்ட போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடந்தது.திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் போட்டிகளை பார்வையிட்டார்.இன்று ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ