மாணவர்களுக்கான மதிப்பீடு வினாடி - வினா தேர்வு; கல்வித்துறை அறிவுறுத்தல்
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு மதீப்பீடு செய்யப்படும் வினாடிவினா நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகங்களில் மாணவர்களுக்கு வினாடிவினா நடத்துவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வினாடி வினா மதீப்படு செய்வதற்கும், ஆசிரியர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.ஆறு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், வினாடி வினா நடத்தப்பட உள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, ஒரு பாடத்துக்கு 5 வினாக்கள் வீதம், மொத்தமாக 25 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 1,2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு 5 வினாக்கள் வீதம் 30 வினாக்கள் எடுக்கப்படுகிறது. மாணவர்கள் பதில் அளிப்பதற்கு 30 நிமிடம் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஆய்வகங்கள் தயாராக வைப்பதற்கும், அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தேர்வுக்கான வினாக்களை தயார்படுத்துவதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராமப்புற அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் வினாடிவினா மதிப்பீடு தேர்வு ஜூலை முதல் வாரம் முதல் துவங்குகிறது.முதற்கட்டமாக, சில பள்ளிகளிலும் இரண்டாம் கட்டமாக, ஆக., முதல் வாரம் சில பள்ளிகளிலும் நடக்கிறது. ஆசிரியர்கள் வினா தொகுப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு, கல்வித்துறை அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.