மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
சக் ஷம் அமைப்பு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. பல்லவராயன்பாளையம் ஸ்ரீராமச்சந்திரா மிஷன் டி.ஜெ., பார்க் ஆசிரம வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆசிரம நிர்வாகி ரங்கசாமி, சக் ஷம் தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தனர். பழனிசாமி - பொன்னம்மாள்அறக்கட்டளை நிர்வாகி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். கடந்த மாத முகாமில், அளவீடு செய்த, 29 மாற்றுத்திறனாளிகளுக்கு, 2.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை அவயம் வழங்கப்பட்டது. ஸ்ரீதரா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், செயற்கை அவயம் வழங்கப்பட்டது.