உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காச நோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம்

காச நோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம்

அவிநாசி; உலக காச நோய் தினத்தை முன்னிட்டு காச நோய் இல்லா தமிழகம் என்ற தலைப்பில், விழிப்புணர்வு ஊர்வலம் அவிநாசியில் நேற்று நடைபெற்றது.சேவூர் மருத்துவம் மற்றும் சுகாதார வட்டார காச நோய் தடுப்பு பிரிவு, அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஐ.எம்.ஏ. டெக்ஸ்சிட்டி ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர்.ஊர்வலத்தை சேவூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், கல்லுாரி முதல்வர் நளதம், காசநோய் மருத்துவ அலுவலர் வனிதாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், மருத்துவ துறையினர், அலுவலர்கள் காசநோய் குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில், மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர் டாக்டர் பிரகாஷ், பாஸ்கரன் ஆனந்தராஜ். கணேசன், டாக்டர் ரபிக் முகமது, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முனைவர் தாரணி, உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் அரசு கல்லுாரியில் துவங்கி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் கல்லுாரி வளாகம் வந்தடைந்தது. காசநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, மாணவர்கள் பங்கேற்றனர். காசநோய் பிரிவு ஆலோசகர் விண்ணரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி